25,000 ரூபாய் கொடுப்பனவு மறுக்கப்பட்டதாக முறைப்பாடு- மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் கோரியுள்ளது.

இரண்டு நாட்களுக்குள் எழுத்துமூலம் பதில் வழங்குமாறு காலக்கெடு குறித்து கடிதம் அனுப்பியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் நிவாரண நிதி வழங்கப்படும் பட்சத்தில் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரியினால் தமது தாய் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மாணவன் ஒருவர் கடந்த புதன்கிழமை (10) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

சண்டிலிப்பாய் – கல்லுண்டாய் பகுதியில் உள்ள மாணவன், அந்த பகுதி கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராகவே முறைப்பாட்டை பதிவு செய்திருந்தான்.

குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், “அரசாங்கத்தின் 25,000 ரூபா நிவாரணத் தொகை வீட்டுக்கானதா அல்லது தனி நபருக்கானதா” என்ற விளக்கத்தை இரு நாட்களுக்குள் எழுத்து மூலம் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply