விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் வாகனப் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
அதன்படி அசோக ரன்வல செலுத்திய வாகனத்தின் பிரேக் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், பிரேக் அமைப்பில் கோளாறு இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வல தொடர்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
