மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 6ஆம் தரம் முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை அனைத்துப் பாடசாலை அதிபர்களும் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 11ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply