கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா ஊட்டச்சத்து உதவித்தொகை இன்று (16) முதல் வழங்கப்படுகின்றது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (16) காலை 9.30 மணியளவில் வெள்ளவத்தை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ்
தலைமையில் நடைபெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஒரு திட்டமாக இந்த 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
2025 நவம்பர் 30ஆம் திகதி வரை தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு முறை மட்டும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
