கெஹெல்பத்தர பத்மேவின் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு!

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் பெருமளவான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’ இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவினர், கெஹெல்பத்தர பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவருக்குச் சொந்தமான ஆயுதங்கள் வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் பராமரிப்பில் நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அதன்படி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் களனி முகாம் அதிகாரிகளின் உதவியுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து எந்தேரமுல்லவிலிருந்து கொழும்பு – கண்டி வீதி வரை உள்ள குறுக்கு வீதியில் அமைந்துள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறை ஒன்றைச் சோதனையிட்ட போதே அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ஒன்றும், ரி-56 ரகத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு மெகசின்கள் மற்றும் ரி-56 ரக 267 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply