பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தவேளையில், 200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தெமட்டகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply