மத்துகம பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை!

மத்துகம பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மத்துகம, வோகன்வத்த, மேல் பிரிவு பகுதியில் வசித்து வந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (16) இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு முற்றியதால் இந்த கொலை இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

கொலையைச் செய்த சந்தேக நபர் சத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மத்துகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இக்கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தொடாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரின் வீட்டிற்கு, இன்று (17) காலை வேளையில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் சென்று தீ வைத்து எரித்து நாசமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply