அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் 3 நாட்களுக்கு முன்னர் வெறுமையான தோட்டாக்கள் சில மீட்கப்பட்டதால், வைத்தியர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கபித்துள்ளனர்.
எனவே தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
எனினும் வைத்தியர்களின் இந்தத் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக, சிகிச்சை பெறுவதற்காகத் தூர இடங்களிலிருந்தும் வருகை தந்த நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
