பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடாத்திய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் பணிப்புறக்கணிப்பானது இன்று (17) மாலை 4.00 மணி வரை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
