முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்குத் தயார் நிலையில் இருந்த கஞ்சா பொதிகளைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மீட்டுள்ள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு – சாலைக் கடற்கரை ஊடாகக் கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கஞ்சா பொதி மீட்கப்பட்டது.
இதன்போது ‘மஹேந்திரா கெப்’ ரக வாகனமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபாய் பெறுமதியான 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் தப்பியோடியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் வாகனமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இவை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
