தெமட்டகொட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சீருடையில் இருந்தவேளையில், 200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தெமட்டகொடை பகுதியில் வைத்து கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைதான சந்தேகநபர்கள் நேற்று (17) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
