சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய நபர் ஒருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பௌஸ்மாவத்தை வீதி மற்றும் மலையார் வீதி சந்திக்கும் பகுதியில் வைத்து நேற்று (18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைதான நபரிடம் இருந்து ஒரு கிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
