தமிழருக்கான தீர்வை வலியுறுத்தி சீமானுடன் கலந்துரையாடல்!

தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் தமிழகம் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் இன்றையதினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் சீமானை இக்குழுவினர் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் தமக்கு குரல்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

நேற்றையதினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் தொடர்பில் இவர்கள் முக்கியமாக கலந்துரைடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply