இணையத்தளம் மூலம் மோசடி- அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இணையத்தளம் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாகக் தெரிவித்து பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார்.

இணையத்தளம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதாயின், சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என நிரோஷ் ஆனந்த தெரிவித்தார்.

மேலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply