கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மெததும்பர மற்றும் மினிபே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டஹின்ன, மத்துரட்ட, ஹங்குரன்கெத மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மூன்றாம் கட்ட வெளியேற்றல் சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
மேலும் பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஹசாலி ஹேமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
