யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேலன் சுவாமி!

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் தையிட்டி விகாரைக்கு அருகில் அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக நடந்துகொண்டதுடன், வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஐவரையும் நேற்றைய தினம் மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

இந்நிலையில், போராட்ட களத்தில் வைத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி நேற்றைய தினம் பிணையில் வெளி வந்து தனது ஆதீனத்திற்கு திரும்பிய நிலையில் சுகவீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply