நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றையதினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
