நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றையதினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை உத்தரவுக்கு அமைய, அவர் இன்று (24) பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
