அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (25) காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 21 பயணிகளுடன் பயணித்த பேருந்து சேருநுவர, மகிந்தபுர சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலை மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
