மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
49 வயதுடைய வெலிகம, வலான பிரதேச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய அவரைப் பிரதேசவாசிகள் மீட்டு மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
