மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று!

படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் துணை ஆயுதக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது 20ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply