கஞ்சாவுடன் கைதான நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்!

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply