சிறைக்கைதியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு- நாகொடை போதனா வைத்தியசாலையில் பதற்றம்!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (31) காலை இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தால் வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply