நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (1) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாடகைக்காக பெறப்பட்டிருந்த வீடொன்றில் தங்கியிருந்த மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய இருவர் காயமடைந்தனர்.
பொரளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அம்பலாந்தோட்டை மற்றும் தெமட்டகொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் ஒருவரின் உடலில் 4 துப்பாக்கி ரவைகளும், மற்றுமொருவரின் உடலில் ஒரு ரவையும் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
