மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வருகை தந்து, அக்கரைப்பற்றுக்குச் செல்லவிருந்த நிலையிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தொடர்பில் அவரது தந்தை தெரிவிக்கையில், நேற்று (01) இரவு 11:00 மணி வரை தங்களுடன் தொடர்பில் இருந்ததாக குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
