கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் உயிரிழப்பு!

மாவெனெல்ல – கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

கொந்தெனிய பகுதியைச் சேர்ந்த 52, 57 மற்றும் 66 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த 35 வயதான பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் கைதான நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply