நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் தாக்கப்படுவது தொடர்பில் நேற்றையதினம் (02) இரவு நூரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைக்கப்பட்டது.
அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு சோதனையிட்டபோது, வீடொன்றுக்கு அருகில் குறித்த சிறுவன் விழுந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுவன் நூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறுவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், பிரேத பரிசோதனைக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை நூரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நூரி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
