அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 15 ஆவது மாடியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நேற்று (02) பிற்பகல் அம்பலங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
