சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் கைது!

சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் வைத்து போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கைதான போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 1080 லீட்டர் கோடா, 109 போத்தல்களில் இருந்த 81 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply