போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சில அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
