3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30 வீதம் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்றைய (06) நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கைகளுக்கமைய 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30 வீதம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவசரப்படாதீர்கள், இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். எங்கள் கொள்கை அறிக்கையில் 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 வீதம் குறைப்பதாகக் கூறப்பட்டுள்ளது- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
