கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றுமொரு சந்தேகநபரை, ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி வழங்கியமை தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் இன்றையதினம் (07) குறித்த இரண்டு சந்தேகநபர்களையும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபர்களை ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply