கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை – கரித்தகந்தை பகுதியில் 52 1/2 மைல் தூண் அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளான காரணத்தினால் குறித்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 5 அலுவலக ரயில்கள் தற்போது தாமதமாக இயங்குவதாக அம்பலாங்கொடை பொலிஸ் தெரிவித்துள்ளது.
தண்டவாளத்தில் சரிந்துள்ள லொறியை அகற்றி, ரயில் மார்க்கத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
