இந்திய இராணுவத் தளபதி- இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சரிடையே சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதியை, பிரதியமைச்சர் அருண ஜயசேகர மிக அன்புடன் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அயல் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் வரலாற்று, கலாசார மற்றும் நாகரிக ரீதியிலான தொடர்புகளை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply