க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் பரீட்சை பணிகளை ஒருங்கிணைக்க 325 இணைப்பு நிலையங்களும், விடைத்தாள்களைச் சேகரிப்பதற்காக 32 பிராந்திய சேகரிப்பு நிலையங்களும் இயங்கும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply