கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு – கண்ணகைபுரம் பகுதியை சேர்ந்தவரும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய ராஜகாந் அனுஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் நேற்று (08) காலை இடம்பெற்றுள்ளது.
எட்டோபிகோக் டிக்சன் (Etobicoke Dixon) பகுதியில் குறித்த பெண் வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெற்ற விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந் நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
