யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியில், வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமாக மொத்தம் 06 பேர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
