முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
