சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
56 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவரிடம் இருந்து 2,400 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
