மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்பு!

மாத்தறை – கொடவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஸ பகுதியில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (11) மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர், கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரதி பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ், பொலிஸ் சார்ஜென்ட் அஜந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க மற்றும் கஹவத்த ஆகியோரால் காப்பாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply