எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்கள் மற்றும் படகு ஆகியன நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
