தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.

லொறியொன்றும், பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக அந்த நேரத்தில் மாத்தறை நோக்கிய திசையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தின் போது எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், தற்போது போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply