சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது தீ வைப்பு- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும் கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply