தெற்கு அதிவேக வீதியில் போதைப்பொருள் கடத்திச் சென்ற இரு நபர்கள் கைது!

தெற்கு அதிவேக வீதியில் போதைப்பொருள் கடத்திச் சென்ற இரு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியின் கொடகம – பாலட்டுவ இடைமாறல் நிலையத்தில் வைத்து, காரொன்றில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற வேளையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் அதிவேக வீதிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து 6 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், சுமார் 6 கிலோகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply