அஹங்கம, தித்தகல்ல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
80 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்டு வீட்டுக்குள் பலத்த காயங்களுடன் இருந்த இரு பெண்களையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காயமடைந்த பெண்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் அஹங்கம தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
