டுபாயில் கைதான குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இன்று நாட்டுக்கு!

குற்ற சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் அண்மையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (16) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களுடன் சேர்த்து பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரும் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கல்கிசை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply