வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர் பயணித்த வேனே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (15) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேகத்தில் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிச் சென்று, எதிர்த் திசையில் பிரவேசித்த வேனுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும் இரண்டு வேன்களும் கடும் சேதமடைந்துள்ளன.
விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
