அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர்கள் மூவருக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர்கள் மூவருக்கு அபராதம் விதித்து வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சந்தேகநபர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜா-எல மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்களே இவ்வாறு தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, ஒரு கிலோ அரிசியை முறையே 308, 275 மற்றும் 280 ரூபாய் ஆகிய அதிக விலைகளில் விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, வர்த்தகர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply