நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நெல்லியடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 50 ஆயிரம் மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானம், 7 இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது தப்பி ஓடிய மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்காக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
