எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்!

பெம்முல்ல, எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் குறித்த நபர் தமது மனைவியுடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, அதன் பின்னர் பெம்முல்ல, எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணாமல் போனவரைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply